#11 - வேடிக்கைப் பார்ப்பவன் ! - A Free Verse Poem

ஐந்து நாள் ஐப்பசி மாத விடா அடைமழையில், ஊரே குளிர்ந்திருக்க, துணிகளை துவைத்து காயவைக்க வெய்யிலை ஏங்கி வானைப் பார்ப்ப்பார் அம்மா.


பன்னிரெண்டு மணி உச்சி வெயிலில், நிலத்திலுள்ள ஈரம் ஆவியாகி, அந்த இடமே வெப்பமும் குளுமையும் கலந்த ஒரு கதகதப்பு தன்மையை உருவாக்கும்.


பலவகை புற்களும், களைச்செடிகளும், செழிப்பாக வளர்ந்திருக்க, பலவகை பூச்சிகளும், குறிப்பாக டிரெயின் பூச்சிகளும் சேர்ந்து ஒரு வகை மணத்தை அவ்விடம் முழுவதும் நிரம்பச்செய்யும். 


இதில் ஏதோ ஒரு கரையான் பொந்தில் இருந்து ஐநூரு ஈசல்கள் பறக்க முடியாமல் அங்குமிங்கும் பறந்தன.


சற்று நேரத்திலேயே காக்கைகளும், இரட்டைவால் கரிச்சான் குருவிகளும், மைனாக்களும், பொந்தைச் சுற்றி வளைத்து ஈசல்களை இரையாக்கி செல்கின்றன.


இதை வேடிக்கை பார்த்தவாறே நான் அச்சிறு வயதிலே, அச்சிரிய வாயில்லா ஈசலிர்க்காக இறக்கப்பட்டேன். 


இப்பொழுதும் பல வாயில்லா மக்களுக்கு நிகழும் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் வேடிக்கை பார்த்து இறக்கப் படுகிறேன்.


எப்பொழுது அவர்களுக்காக நிற்க்கப் போகிரேனோ ?



-செந்தில் ராசன் 




Comments